செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 7 அக்டோபர் 2019 (14:24 IST)

உணவு ஊட்டும்போது , மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை !

சென்னையில் மாடியில் இருந்து குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கும்போது, தாயின் கையிலிருந்து தவறி குழந்தை கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொண்டித்தோப்பு சரவணமுதலி தெருவில் வசிப்பவர் அருண் (35). இவரது மனைவி ஜெயஸ்ரீ(30). இந்த தம்பதியர்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியில் இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3 வது மாடியில் குடியிருந்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கடந்த  சனிக்கிழமை அன்று, வீட்டின் பால் கனியில் நின்று, தனது ஒன்றரை வயது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார் ஜெயஸ்ரீ .அப்போது, எதிர்பாராத விதமாக அவர்  கையில் வைத்திருந்த குழந்தை திமிறி  கீழே விழுந்ததாகத் தெரிகிறது. அதனால் அவர் பதறிப்போய் கதறி அழுதார்.
 
பின்னர், குழந்தையை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்து. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து போலீஸார் தீவிரமாக  விசாரணை நடத்தி வருகின்றனர்.