செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : சனி, 5 அக்டோபர் 2019 (15:29 IST)

பேருந்தை ஓட்டிச்சென்ற டிரைவருக்கு மாரடைப்பு ...சாலையில் விபத்து !

சென்னை வேளச்சேரியில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் நடுரோட்டில் ஒரு காரின் மீது மோதி கடுமையான விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில்  போக்குவரத்து பாதித்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதனால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 
 
இதனையடுத்து அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்து ஓட்டுநரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பேருந்தில் அமர்ந்திருந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.