பேராசிரியை நிர்மலா கைது எப்போது? காவல்துறை அறிவிப்பு

Last Modified திங்கள், 16 ஏப்ரல் 2018 (16:17 IST)
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்
இந்த நிலையில் மாணவிகளிடம் தவறாக பேசியதாக பேராசிரியர் நிர்மலா தேவி மீது காவல்துறையினர் சற்றுமுன் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கல்லூரியின் நிர்வாகம் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் நிர்மலாதேவி விரைவில் கைது செய்யப்படுவார் என ஏடிஎஸ்பி மதி தெரிவித்துள்ளார். எனவே எந்த நேரமும் பேராசிரியர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :