செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (18:34 IST)

ஓய்வு பெற்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் கொலை: காஞ்சிபுரம் மதிமுக நிர்வாகியிடம் விசாரணை..!

காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக மதிமுக நிர்வாகி இடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் 63 வயது கஸ்தூரி என்பவர் தனது தனது மகனுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவருக்கும் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி என்பவருக்கும் இடையே சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக பிரச்சனை இருந்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி கஸ்தூரி வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந் நிலையில் கஸ்தூரியின் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது உள்ளே அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதியை போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அவரிடம் தற்போது ரகசிய இடத்தில் விசாரணை நடந்து கொண்டு வருவதாகவும் விசாரணையின் முடிவில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran