ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:19 IST)

எடப்பாடி பழனிச்சாமி திருவுருவப் படத்தை எரிக்க முயன்ற பா.ஜ.க வினர்- போலீசாருடன் கடும் வாக்கு வாதம்.......

காரியாபட்டியில் 
பாஜக தலைவர் அண்ணாமலையை தாக்கி பேசிய அதிமுக 
பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிச்சாமியை  கண்டித்து              அவரது உருவப்படத்தை  எரிப்பதற்காக
பா.ஜ.க வினர் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள்  பஸ்   நிலையம் வந்தனர்.
 
அப்போது  பழனிச்சாமியின் படத்தை பாஜகவினர் எரிக்க முயற்சி செய்தபோது  போலீசார் உங்களுக்கு படத்தை எரிக்க,ஆர்ப்பாட்டம் செய்ய  அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
 
அதையும் மீறி திடீரென்று பா.ஜ.கவினர் பழனிச்சாமியை  படத்தை எரிக்க  முயற்சி செய்தனர் போலீசார் அதை தடுத்து அந்த படங்களை பறித்தனர்.
 
பின்னர்
பழனிச்சாமியை கண்டித்து கோஷஙகளுடன் ஆர்ப்பாட்டம் 
செய்தனர்.
 
அப்போது பா.ஜ.கவினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.