வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (15:23 IST)

இந்திய மக்களை குறை சொல்லவில்லை- ஸ்பெயின் நாட்டு பெண் !

spain women
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி இருசக்கர வாகனம் மூலம்  நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளுக்கு பயணம் மேற்கோண்ட இவர்கள் தற்போது  இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில்  ஜார்கண்ட் மாநிலத்தில் பயணம் மேற்கோண்டபோது,  வெள்ளிக்கிழமை அன்றிரவு, தும்கா மாவட்டத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்போது, உள்ளே புகுந்த கும்பல் ஒன்று கணவரை தாக்கிவிட்டு, மனைவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தனர். இது  நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதையடுத்து ஸ்பெயின் நாட்டு தம்பதியினர் தங்கள் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.
 
இதுகுறித்து ஸ்பெயின் நாட்டு பெண் கூறியதாவது:
 
இந்திய மக்கள் நல்லவர்கள்  நான் ஒட்டுமொத்தமான இந்திய மக்களை குறை சொல்லவில்லை.  ஆனால், குற்றவாளிகளை மோசமானவர்கள் என்று கூறுகிறேன். இந்திய மக்கள் என்னிடம் அன்பாக நடந்து கொண்டனர்.
 
கடந்த  மாதங்களாக இந்தியாவில் 20 ஆயிரம் தூரத்திற்கு மேலாக பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டோம். எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. முதல்முறையாக இது நடந்தது. அமைதியாகவும், அழகாகவும் இருந்ததால், அன்றிரவு அந்த இடத்தை தேர்வு செய்தோம். தனியாக தங்குவதற்கு அவ்விடம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தோம். இதுபோன்ற சூல்நிலைகளை எதிர்கொள்ள பெண்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.