அரசு பள்ளிகளில் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்க இருப்பதை அடுத்து, அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் தனியார் பள்ளிகளைப் போலவே, அரசு பள்ளியிலும் மார்ச் மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப் பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர்கள் கடந்த ஆண்டு சேர்ந்த நிலையில், அதே மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டும் உறுதி செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கன்வாடி மையத்தில் முன்பருவ கல்வி முடித்த மாணவ, மாணவிகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நாளை தொடங்கும் சேர்க்கையில் பல பெற்றோர்கள் தற்போது அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva