திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (07:09 IST)

அதிமுக ஆட்சி முடிவுக்கு வருவது எப்போது? தினகரன் கருத்து

அதிமுக ஆட்சி இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த பல மாதங்களாக கூறி வரும் நிலையில் தற்போது, பாராளுமன்ற தேர்தலுக்கு பின் இரண்டு மாதங்களில் தற்போதைய அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகள் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால் இதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என திமுக தலைவர் மு.க,.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்

ஆனால் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனோ, '21 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று அதிமுகவை கைப்பற்றுவோம் என்றும், அதன்பின் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை நடத்துவோம் என்றும் கூறி வருகிறார்.

மேலும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருந்த வரையில் தான் இரட்டை இலை சின்னம் வெற்றி சின்னமாக இருந்ததாகவும் ஓபிஎஸ், ஈபிஎஸ் கைக்கு அதிமுக வந்ததும் அதிமுகவின் இரட்டை இலை ஆர்கே நகரில் படுதோல்வி அடைந்ததாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.