1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (08:45 IST)

டிடிவி தினகரனுக்கு அரசியல் எதிர்காலம் உண்டா?

திமுகவை கைப்பற்றுவேன், இரட்டை இலையை கைப்பற்றுவேன் என்று கூறிய தினகரனால் தற்போது அமமுகவை கூட காப்பாற்ற முடியாமல் உள்ளது. அவரை மலைபோல் நம்பியிருந்த தலைவர்கள் கூட தற்போது அவர் மீது நம்பிக்கை இழந்து அதிமுக, திமுக என தாவி வருகின்றனர். 
 
ஆர்.கே.நகரில் அவர் பெற்ற பிரமாண்டமான வெற்றி அவர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் நடைபெற்று முடிந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் அவரால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. கமல்ஹாசன் கட்சி ஏற்படுத்திய பரபரப்பை கூட அவரால் ஏற்படுத்த முடியவில்லை
 
அதிமுக ஆட்சியை அவர் கவிழ்க்க எடுக்க முயற்சிகளையும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் மத்திய அரசின் உதவியால் முறியடித்து வருவதால் அமமுகவில் உள்ளவர்கள் சோர்ந்து போய்விட்டதாகவும் இனியும் தினகரனை நம்பி பிரயோஜனமில்லை என்று அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூடிய விரைவில் அமமுக கூடாரம் முற்றிலும் காலியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது
 
சசிகலா சிறையில் இருந்து வெளியே வர இன்னும் இரண்டு வருடங்கள் இருப்பதால் அதுவரை தினகரனால் ஒன்றும் செய்ய முடியாதே என்றே இப்போதைய நிலையில் கருதப்படுகிறது இதையும் மீறி தினகரன் எழுச்சி அடைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்