செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (15:05 IST)

வீணா போன குற்றாலம் ப்ளான்: சசியின் அடுத்த மூவ் என்ன?

தமிழக அரசியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை என கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனால் அந்த 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் சட்டமனற உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. 
 
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலாவின் அடுத்த மூவ் என்னவென்பதுதான் கேள்வி குறியாய் உள்ளது. 
 
தினகரன் எப்போதும் எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னர் சசிகலாவை சென்று சந்தித்து வருவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்த குற்றாலம் ப்ளானும் அப்படித்தான். ஆனால், இந்த ப்ளான் தற்போது வீணானது. இதற்கு முன்னர் போடப்பட்ட கூவத்தூர் ப்ளானும் அப்போது செயல்பட்டாலும் இப்போது வீணான ஒன்றாக தெரிகிறது. 
 
இதெல்லாம் ஒரு புறம் இருக்க இந்த தீர்ப்பு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதை சசிகலா எவ்வாறு முடிவு செய்வார்? பதவியை இழந்து இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதும், பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.