1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (13:44 IST)

டிடிவி.தினகரனுக்கு வந்த சோதனை..

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என   இறுதி தீர்ப்பு அளித்தார். 
இந்த வழக்கில் ஜெயிப்போம் என பெரிதும் எதிர்பார்த்திருந்த தினகரன் உட்பட 18 ஆதரவு எம்.எல்.ஏக்களும் அடுத்து இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள்  வெளியாகின்றன.
 
ஏற்கனவே ஆர்கே நகர் தேர்தலில் டோக்கன் கொடுத்து ஜெயித்ததாக  தினகரன் தரப்பு மீது ஏகபோக விமர்சனங்கள் எழுந்தன. இனி அடுத்து இடைத்தேர்தல் வரப்போகிற திருப்பரங்குன்றம் ,திருவாரூர் தொகுதிகளில் இவர் எந்த மாதிரியான யுக்திகளை கையாளப்போகிறார் என பேச்சு எழுந்து வருகிறது.
 
மேலும் தன் வசமுள்ள இந்த பதினெட்டு எம்,.எல்,ஏக்களையும் கைக்குள்ளேயே வத்து பாதுகாத்துவருவதாகவே எண்ணிக்கொண்டிருக்கிறார்.இந்த தீர்ப்பு தங்களுக்கு பாதகமாக வந்ததையடுத்து இனி அடுத்து என்ன செய்யலாம் என 18 எம்.எல்.ஏக்களும் மூளையைப்பிசைகின்றனர்.
நிச்சயமாக இஅவர்களை தம்வசம் ஈர்க்க அதிமுக  எடப்பாடி அரசும் முயற்சி மேற்கொள்ளும் அதிக பலம் முகுந்த ஆளும் அதிமுக அரசினை எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்  தினகரன் தம் ஆதரவு எம்.எல்.ஏக்களை தக்க வைக்கும் அதேசமயம் அடுத்து வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலுக்கும் தன் கட்சியை தயார் செய்யவேண்டியதிருக்கும். இவையெல்லாவற்றிக்கும் தன்னை  சுயபரிசோதனை செய்து கொண்டு அவர் ஆழங்காலூன்றினார் என்றால்தான் அவரது அரசியல் பாட்சா பலிக்கும். இல்லை என்றால் அது கானல் நீராகும்.
 
இந்த 18எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் வர வாய்ப்புண்டு. ஆனால் இவர்களை நம்மி தேர்தலில் ஓட்டுப்போட்ட மக்களுக்கு இவர்கள் ஏமாற்றத்தை தவிர்த்து வேறென்ன தந்தார்கள் என்பதை யோசிக்கும் போது அடுத்து தேர்தல்களில் மக்கள் தம் முந்தைய காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தை அடிப்படையாக வைத்தே வேட்பாளர்களை தேர்வு செய்வர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
 
இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தம் சொந்தக்காரணங்களுக்கும் பகைக்கும் மக்களை பலிகடாவாக ஆக்கக்கூடாது எனபதே பொதுமக்களிம் வேண்டுகோளாகவும் இருக்கிறது.