செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (17:45 IST)

பிளாஸ்மா சிகிச்சை என்பது என்ன?

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இச்சிகிச்சை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்... 
 
பிளாஸ்மா சிகிச்சை என்பது கடந்த 100 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. பிளாஸ்மா சிகிச்சை என்பது வைரஸ் நோய் தாக்கியவர்களிடம் இருந்து பெறப்படும் எதிர்ப்பு அணுக்கள் சிகிச்சை முறையாகும். 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்றாக குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பி.லிம்போ சைட் செல்களில் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி திரவம் சுரக்கும். அந்த திரவத்தை தனியாக பிரித்து எடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் அணுக்கள் கிடைக்கும்.
 
வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 800 மில்லி லிட்டர் பிளாஸ்மாவை சேகரிக்க முடியும். இந்த பிளாஸ்மா அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். இந்த நோய் எதிர்ப்பு பிளாஸ்மாவை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தினால் மூன்றே நாட்களில் குணமாகி விடுவார்கள்.