புதன், 25 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2016 (14:44 IST)

மோடியின் ரூபாய் நோட்டு ஆப்புக்கு ஜெயலலிதாவின் ரியாக்‌ஷன்?

மோடியின் ரூபாய் நோட்டு ஆப்புக்கு ஜெயலலிதாவின் ரியாக்‌ஷன்?

தற்போது உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெறலாம் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 
 
ஆதரவும் எதிர்ப்பும் இந்த திட்டத்திற்கு சேர்ந்தே வருகிறது. பொது மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் எனவும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லாமல் இந்த திடீர் அறிவிப்பு வந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.
 
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை பாஜக ஆளும் மாநில அரசுகள் பாராட்டியும், காங்கிரஸ் முதலமைச்சர்கள் எதிர்த்தும் வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்.
 
மேலும் இடது சாரிகள் இந்த திட்டத்தை மிகக்கடுமையாக எதிர்க்கின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு அளிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்ற நிலைப்பாடு தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
ஆனால் அதிமுக ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சியில் இந்த நடவடிக்கையை வரவேற்கும் விதமாக செய்திகளை வெளியிட்டும் அதே நேரத்தில் இதனால் பொதுமக்கள் சந்திக்கும் அவதியையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதில் முதல்வர் ஜெயலலிதாவின் மவுனம் கலைந்து விரைவில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.