1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (08:00 IST)

சித்தியையும் என்னையும் சந்தேகப்பட்டார் சித்தப்பா – புழல் கொலையில் குற்றவாளி வாக்குமூலம் !

தோசை மாவில் விஷம் கலந்து கணவனை மனைவியும் அவரது அக்கா மகனும் கொலை செய்த வழக்கில் கொலைக்கான பின்னணி விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு அனுஷியா என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 5 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்ட அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். சுரேஷ் கறிக்கடை ஒன்றிலும் அனுஷியா மெடிக்கல் ஷாப் ஒன்றிலும் வேலைப் பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அனுஷியா அவரது அக்கா மகனாக முரசொலி மாறனுடன் நட்பாகப் பழகி வந்துள்ளார். அனுஷியாவுக்கு முரசொலி மாறன் மகன் முறை என்றாலும் இருவருக்கும் கிட்டதட்ட ஒரே வயது என்பதால் சிறுவயது முதலே நண்பர்கள் போல பழகி வந்துள்ளனர். ஆனால் அனுஷியாவின் கணவருக்கு அவர்கள் பழகுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  இது சம்மந்தமாக அனுஷியாவிடம் அடிக்கடி சண்டை வளர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் சுரேஷின் தொல்லை தாங்காத அனுஷியா முரசொலி மாறனிடம் இது பற்றிப் புலம்பியுள்ளார். இதைக்கேட்ட முரசொலி மாறனே தோசை மாவில் மயக்க மருந்து கலக்கும் யோசனையை சொல்லியுள்ளார்.

அதன் பின் சுரேஷ் மயங்கியதும் முரசொலி மாறனை வரவழைத்து அனுஷியாவின் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெறித்து சுரேஷைக் கொலை செய்துள்ளனர். ஆனால் கழுத்தில் தழும்பு ஏற்பட்டதால் இருவரும் போலிஸிடம் மாட்டிக்கொண்டுள்ளனர். விசாரணையில் ‘என்னையையும் சித்தியையும் சந்தேகப்பட்டதாலேயே கொலை செய்தோம்’ என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.