புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 நவம்பர் 2018 (20:07 IST)

சென்னை மெரினாவுக்கு என்ன ஆச்சு...? பஞ்சு நுரைகள் பொங்கக் காரணம் என்ன..?

கஜாபுயல் வந்ததுதான் வந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒரு புரட்டு புரட்டிவிட்டுப் போய்விட்டது.ஆனால் அது போனால் பரவாயில்லை. வீரஞ்செறிந்த தமிழகம் தன்னை தேற்றிகொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கிச் செல்ல தன்னை துரிதப்படுத்தும்.
இப்போது காலநிலை மாற்றம் போல உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவில் இன்று மாலையில் கடல் அலைகள் கரையை வந்து தழுவும் போது மணலில் பொங்கும் நுரைகள் பஞ்சு போன்று இருக்கின்றன.
 
இந்த நுரைகளைப் பார்த்து மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த கஜா புயலால் ஏற்பட்ட மாற்றம்தான்  இதற்குக் காரணமோ என பலரும் கூறிவருகின்றனர்.
 
இது குறிந்து கடல்சார் ஆராய்சியாளர்கள் தான் ஆராய்ந்து கூற வேண்டும் என மக்கள் கருதுகிறார்கள்.