புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (08:20 IST)

கனமழை எதிரொலி: எந்தெந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளும் கனமழையை முன்னிட்டூ ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலையின் துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்

மேலும் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளதூ.

அதேபோல் கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த அரசு சட்டக் கல்லூரி மற்றும் சீர்மிகு சட்டக் கல்லூரி தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் ராவணன் அறிவிப்பு செய்துள்ளார்.