ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (20:51 IST)

சென்னையில் இன்று போல் நாளையும் மழை: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் இன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்றுபோல் நாளையும் தொடர்மழை சென்னையில் பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கடற்கரைப் பகுதியில் இருந்த மழை மேகங்கள் சென்னைக்குள் நகரத் தொடங்கியுள்ளதால் கிழக்கு கடற்கரைச்சாலை, சிறுசேரி ஆகிய கடலோரப் பகுதிகளிலும், சென்னையின் பல பகுதிகளிலும் இன்று நல்ல மழை பெய்தது

இதே வானிலை நாளையும் நிலவுவதால் இன்று பெய்த மிதமான மழை நாளை மதியம் வரை தொடரும் என்றும், ஆனாலும், இந்த மழையால் கிடைக்கும் நீர் சென்னையின் குடிநீர் தேவைக்கு போதுமானதாக இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.  டிசம்பர் மாதம் எதிர்பார்த்த மழை பெய்தால் மட்டுமே சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.