புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (09:03 IST)

குடியுரிமைத் திருத்த சட்டத்தை கிழித்த மாணவி – பட்டமளிப்பு விழாவில் நூதன எதிர்ப்பு !

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி பேட்ஸ்மிதா சவுத்ரி பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

வட கிழக்கு மாநிலங்களில் மற்றும் மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிரானப் போராட்டம் தீவிரமாக இருந்து வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நூதனமாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவி பேட்ஸ்மிதா சவுத்ரி மேடையில் ’தான் குடியுரிமை திருத்த சட்டத்தையும் என் ஆர் சி யையும்  எதிர்ப்பதாகவும், அரசிடம் எந்த ஒரு ஆவணத்தையும் தர முடியாது’ எனவும் மேடையில் அறிவித்தார். மேலும் தன் வசமிருந்த குடியுரிமை திருத்த சட்ட நகலை மேடையிலேயே கிழித்துவிட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிவிட்டு பட்டத்தைப்  பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் போராட, ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமலேயே திரும்பிச் சென்றார்.