திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (20:13 IST)

போலீசாருக்கு ரோஜாப்பூ கொடுத்த போராட்டம் செய்த மாணவி: வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் குடியுரிமை சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. இந்த நிலையில் இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். டெல்லி உள்பட ஒருசில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவிற்கு இந்த போராட்டம் தீவிரமாகி உள்ளது
 
இந்த நிலையில் மாணவர்களில் பெரும்பாலானோர் அறவழியில் போராடி வருவதாகவும் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் எந்தவித வன்முறையும் இல்லாமல் தங்கள் கோஷங்களை மட்டுமே மாணவர்கள் எழுப்பி தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது 
 
இந்த நிலையில் டெல்லியில் மாணவர்கள் போராட்டம் செய்த இடத்திற்கு போலீசார்கள் வந்தபோது அங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவி ஒருவர், சிவப்பு ரோஜாவை போலீசாரிடம் கொடுத்துள்ளார். போலீசாக இருந்தாலும் அன்பை பரிமாறுங்கள் என்று அவர் கூறியுள்ளது அனைத்து போலீசாரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது