ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (14:10 IST)

முதல்வர் ஸ்டாலின் கண்டனத்திற்கு மேற்கு வங்க ஆளுனர் பதில்!

மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்றத்தை முடக்கிய மேற்கு வங்க மாநில ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
 
ஒரு மாநிலத்தின் தலைவராக இருக்கும் ஆளுநர் அந்த மாநில அரசுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்றும் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் தான் ஜனநாயகம் என்றும்,  மேற்கு வங்க சட்டசபையை முடக்கிய ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார் 
 
இந்த கண்டனத்திற்கு பதிலளித்துள்ள மேற்கு வங்க ஆளுநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
11ம் தேதி மாலை மேற்கு வங்க சட்டப்பேரவை விவாகரங்கள் அமைச்சரவையில் இருந்து  அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 2ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே மேற்குவங்க அரசு கேட்டுகொண்டதையடுத்து சட்டப்பேரவை முடக்கம் செய்யப்பட்டது.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான அவதானிப்புகளில் உண்மை இல்லை. அரசின் கோரிக்கையை ஏற்றே சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.