செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:42 IST)

நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது துரதிர்ஷ்டம் : சசிகலா

நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது துரதிர்ஷ்டம் என சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்பது தெரிந்ததே 
 
இதனை அடுத்து ஆளுநருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பதும் ஆளுநரை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது துரதிர்ஷ்டம் என அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்ளும் சசிகலா தெரிவித்துள்ளார்
 
ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து கிராமப்புற ஏழை மக்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.