வடகிழக்கு பருவமழையின் முதல் மழையே மிக அதிகம்: தமிழ்நாடு வெதர்மேன்
வடகிழக்கு பருவ மழையின் முதல் மழையே மிக அதிகம் என்றும் முதல் 36 மணி நேரத்திலேயே 50 சதவீத மழை பெய்து விட்டது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
சென்னை மழை குறித்து அவ்வப்போது தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியபோது சென்னையில் குறிப்பாக வட சென்னையில் 36 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும் 90% நவம்பர் மாதம் மழையை இரண்டே நாட்களில் வடசென்னை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
வடகிழக்கு பருவமழையின் முதல் மழையே மிக அதிகம் என்றும் வட சென்னை பகுதியில் 300 மீட்டர் மழை என்பது மிக மிக அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் வரை கிடைக்க வேண்டிய மொத்த பருவமழையில் 50% சென்னை இப்போதே பெற்று விட்டது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்
அதனால் தான் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Edited by Mahendran