1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஜூலை 2018 (16:37 IST)

கோ பேக் ஸ்டாலினுக்கு பதிலாக வெல்கம் ஸ்டாலின் - இதுவும் ட்ரெண்டிங்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 9ம்தேதி லண்டன் கிளம்பி சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றுள்ளார்.


லண்டனில் மு.க.ஸ்டாலின் சுமார் ஒருவார காலம் தங்கியிருந்து அதன்பின்னர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. 
 
அதன்படி, இன்று அவர் சென்னை திரும்புகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. 

அதிமுகவிற்கு எதிராக தீவிரமாக திமுக செயல்படவில்லை. திமுகவால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை என சிலரும், ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத நேரத்தில்தான் கர்நாடகாவில் மழை பெய்து, காவிரியில் தண்ணீர் வருகிறது என செண்டிமெண்டாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

 
ஆனால், இது பாஜகவினரின் வேலை என களம் இறங்கிய பலர் அதற்கு எதிர்ப்பாக ‘வெல்கம் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிவிட்டுகள் போட தற்போது இந்த ஷேஷ்டேக் இரண்டாம் இடத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது.