1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஜூலை 2018 (16:37 IST)

விவசாயிகளுக்காக 5 ரூபாய் கூட்ட முடியாதா? பாஜகவை கிழிக்கும் சிவசேனா!

மராட்டிய மாநிலத்தில் பால் ஒரு லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட வேண்டும் என பால் உற்பத்தி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் செய்தி வெளியாகியுள்ளது. அது பின்வருமாறு, கடந்த 4 வருடங்களில் மட்டும் 3000 விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மோடிக்கு வாக்களித்தவர்கள். 
 
பால் உற்பத்தி விவசாயிகள் மேற்கொண்டு உள்ள போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்று அரசு சிந்திக்க வேண்டும். 
 
பாஜக ஒருபுறம் விவசாயிகளின் போராட்டத்தை முடக்க பார்க்கிறது, மறுபுறம் விவசாயம் வாழ்க என கோஷம் எழுப்புகிறது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.27 என அரசு நிர்ணயம் செய்து உள்ளது, ஆனால் விவசாயிகளுக்கு இன்னும் ரூ.16-18 மட்டுமே வழங்கப்படுகிறது.
 
புல்லட் ரெயில் திட்டத்திற்கு அரசு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. புல்லட் ரெயில் திட்டத்திற்காக கடன் வாங்கவும் பேசுகிறது, ஆனால் விவசாயிகளுக்காக 5 ரூபாயை கூட்ட மறுக்கிறது. விவசாயிகளுக்கு நியாயம் கிடைப்பது எப்போது? என செய்தி வெளியிட்டுள்ளது.