இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றிய நிலையில், இது மேலும் வலுவடைந்து தமிழகத்தை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழை அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva