செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 23 நவம்பர் 2024 (10:44 IST)

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

H Raja
பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான ஹெச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஹெச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அந்த கட்சியின் நிர்வாகி தாம்பரம் யாகூப் என்பவர் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, யாகூப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரூர் நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் விவரம்: யாகூப், ஹெச். ராஜா மீது மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும், அந்த நிகழ்ச்சியில் இரண்டு எம்எல்ஏக்களும் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடைய முன்னிலையில் ஒரு அரசியல் கட்சியின் மூத்த தலைவரை 24 மணி நேரத்தில் கொலை செய்வேன் என்று பேசியுள்ளதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது கவனிக்கப்படும்.


Edited by Mahendran