1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2017 (17:36 IST)

விஷால் தேடும் நபர்களை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

இன்று மதியம் 3 மணிக்குள் விஷாலை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகிய இரண்டு பேர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் விதித்த கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், விஷால் தேடும் 2 பேரை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். 
 
மேலும் அதிமுகவினர் பயப்படும் அளவுக்கு நடிகர் விஷால் என்ன சூரப்புலியா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாம்புகளையே கையில் பிடிக்கும் தைரியம் அதிமுகவிற்கு உண்டு என்று கூறியுள்ளார்.
 
விஷால் தேடி வரும் இரண்டு நபர்கள் அதிமுகவினர்களால் மிரட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில் ராஜேந்திர பாலாஜியின் இந்த பதில் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.