1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2017 (17:36 IST)

தேர்தல் அதிகாரியுடன் விஷால் மீண்டும் சந்திப்பு:

விஷாலை முன்மொழிந்து பின்னர் மறுத்ததாக கூறப்படும் தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் இன்று மதியம் மூன்று மணிக்குள் தேர்தல் ஆணைய அலுவலத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தால் விஷாலின் வேட்புமனு பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது. ஆனால் மூன்று மணி நெருங்கும் நிலையில் இன்னும் அந்த இருவரும் தேர்தல் அலுவலகத்திற்கு வரவில்லை. அவர்கள் இருவரும் இருக்கும் இடமும் தெரியவில்லை
 
இந்த நிலையில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய இருவரையும் காணவில்லை என்று தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை நேரில் சந்தித்து நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் தற்போது தேர்தல் அதிகாரியிடம் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
 
தேர்தல் அதிகாரி இன்று வேட்பாளர் இறுதி பட்டியலை வெளியிட வேண்டிய நிலையில், விஷாலுக்கு மேலும் அவகாசம் கொடுப்பாரா? அல்லது இறுதி பட்டியலை வெளியிடுவாரா? என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.