வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:50 IST)

சர்க்கார் படத்திற்கு ஃப்ரீ ப்ரோமோஷன் கிடையாது... முக்கிய பிரபலத்தின் பேச்சு

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக இருக்கும் சர்க்கார் படத்திற்கு நாங்கள் ஃப்ரீ ப்ரோமோஷன் செய்ய மாட்டோம் என பாஜக பிரமுகர் ஒருவர் கூறியிருக்கிறார்.
கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என கூறிக்கொண்டு தமிழக பாஜக பிரமுகர்கள் செய்த வேலையால் படம் இந்தியா முழுவதிலும் மாபெரும் வெற்றி பெற்றது.
 
காசு வாங்காமலேயே பாஜகவினர் மெர்சல் படத்திற்கு ஃப்ரீ ப்ரோமோஷன் செய்தார்கள் என கிண்டலடிக்கப்பட்டது.
இந்நிலையில் விஜயின் அடுத்த அரசியல் படமான சர்க்கார், மெர்சலை விட அதிக அரசியல் பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பேசிய பாஜக பிரமுகர் எஸ்.ஆர்.சேகர், சர்க்கார் ஒரு குப்பைப்படம், அதை நாங்கள் சீண்ட கூட மாட்டோம். படத்தைப் பற்றி பேசி விஜய்யை பெரிய ஆளாக்க விரும்பவில்லை. எங்களால் படத்திற்கு எந்தவித ஃப்ரீ ப்ரோமோஷனும் கிடைக்காது என கூறியுள்ளார்.
 
சர்க்காரை குப்பைப் படம் எனக் கூறிய இவருக்கு விஜய் ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.