1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (16:07 IST)

'ஒரு விரல் புரட்சி' விஜய்யின் சர்கார் படத்தின் 2வது சிங்கிள் டிராக்!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியிடப்படும் என  சன் பிக்சர்ஸ் நிறுவனம்  அறிவித்துள்ளது.
 

இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் சிம்டாங்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது. இந்த பாட்டு ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனிடையே நேற்று, விஜயின் நியூ லுக் வெளியிடபட்டது.

இதையடுத்து, `ஒரு விரல் புரட்சி’ என்ற  இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடல் இன்று மாலை வெளியிடப்படும் என சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வெளியாக உள்ளது. ஓட்டு போடுவது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஒருவிரல் புரட்சி என்ற பாடல் மூலம் விஜய் உணர்த்துவார் என அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.