திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 அக்டோபர் 2018 (07:01 IST)

ஊழலை ஒழிப்பேன்னு சொல்ற சினிமாகாரங்கல நம்பாதீங்க - விஜயை சீண்டிய சினிமா பிரபலம்

ஊழலை ஒழிப்பேன்னு சொல்ற சினிமாகாரங்களை நம்பாதீர்கள் என்னை உட்பட என இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிப்பேன், நாட்டுமக்களை காப்பாற்றுவேன் என கூறிக்கொண்டு பல சினிமா பிரபலங்கள் தற்பொழுது அரசியலில் நுழைகின்றனர். ரஜினி, கமல் ஏற்கனவே அரசியலில் நிழைந்துவிட்டனர். சர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன். ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன் என தன் அரசியல் வருகைக்கு அடிபோட்டார்.. சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது தற்பொழுது ஒரு டிரெண்டாகவே மாறி வருகிறது.
இந்நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட இயக்குநர் கூறியதாவது, ஊழலை ஒழிப்பேன் என கூறிக்கொண்டு தற்பொழுது நிறைய பிரபலங்கள் அரசியலில் நுழைகிறார்கள். மக்கள் தயவு செய்து அவர்களை யாரும் நம்பாதீர்கள். என்னை உட்பட... அவர்களால் சினிமாவில் உள்ள ஊழலையே தடுக்க முடியாது. ஒரு படத்தை எடுத்துவிட்டு லஞ்சம் கொடுக்காம ஊழல் செய்யாம படத்திற்கு வரிச்சலுகை வாங்க முடியாது.. இது சினிமாகாரங்களுக்கு தெரியும். இப்படி இருக்கும்போது இவர்களால் எப்படி நாட்டில் நடக்கும் ஊழலை ஒழிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார். இவர் விஜயை தான் சீண்டி பேசியிருக்கிறார் என பலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.