ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (14:04 IST)

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் காப்பருக்கு தட்டுபாடு: அமைச்சர் தங்கமணி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தமிழகத்தில் காப்பருக்கு தட்டுபாடு ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

சென்னையில் சில நாட்களாக மின் தட்டுபாடு ஏற்பட்டுவருகிறது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுகிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், காப்பருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஆதலால் மின்சார வாரியத்தில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மேலும் அவர், சென்னையில் தற்போது இரவு நேரங்களில் மின் அழுத்தம் குறைவாக உள்ளதாகவும், தற்போது மின் தேவை 3,700 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் காப்பர் தட்டுபாட்டை போக்குவதற்கு, தமிழக மின் வாரியம் பல மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புற மக்கள் பெரும் பாதிப்பு அடைகின்றனர் என கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தில், 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் போலீஸாரால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.