வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (11:02 IST)

ஸ்டாலின் - தினகரனுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்: செல்லூர் ராஜூ கிண்டல்

திமுகவும், டிடிவி தினகரன் கட்சியும் இணைந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக அதிமுக அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்கு பலமுறை தினகரனும், மு.க.ஸ்டாலினும் பதில் சொல்லியும் அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டி கூறிக்கொண்டே வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு பேசியபோது, 'ஆட்சியை அகற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கும் டிடிவிக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருகிறோம் என கிண்டலாக கூறியுள்ளார். மேலும் ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் எங்களிடம் மக்கள் படை, இளைஞர் படை, மாணவர் படை உள்ளது என்றும், நாங்கள் எதிரியை சந்திக்க தயாராக உள்ளதாகவும் இதனை வரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிரூபிப்போம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக பேசியுள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் மிக விரைவில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.