வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (08:25 IST)

தினகரன் ஒரு லூசு; தியாகிக்கும் திருடனுக்கும் வித்தியாசம் இல்ல... ஜெயகுமார் பாய்ச்சல்

ஆளும் கட்சியான அதிமுகவின் முக்கிய தலைவரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயகுமார் சென்னை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயகுமார் கலந்துக்கொண்டு பின்வருமாறு பேசினார். அவர் பேசியது பின்வருமாறு...
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவை கைப்பற்ற சசிகலா குடும்பம் முயற்சித்தது, அவர்கள் நல்லது செய்ய ஆட்சிக்கு வர விரும்பவில்லை. இது தெரிந்ததும் நாங்கள் சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு விலக்கிவிட்டோம். 
 
லண்டனில் ஓட்டல் வாங்கிய வழக்கில் ஜெயலலிதா முதற் கொண்டு சிலர் மீது வழக்கு இருந்தது. ஆனால், இந்த வழக்கில் இருந்து தினகரன் மட்டும் தப்பித்தார். அப்போது ஆட்சியில் இருந்த திமுகவிற்கு சில ரகசிய தகவல் கொடுத்ததால் இந்த வழக்கில் இருந்து தினகரன் பெயர் நீக்கப்பட்டது. 
 
எப்போது எங்கு என்ன பேசினாலும் காரணமே இல்லாமல் லூசு போல சிரிக்கிறார் தினகரன். என்னவோ சிறைக்கு சென்றதை பெறுமையாக பேசிவருகிறார். தியாகிக்கும், திருடனுக்கும் வித்தியாசம் இல்லையா என்ன? ஆர்.கே.நகரில் ஏமாற்தது போல மக்கள் இனி தினகரனிடம் ஏமாற மாட்டார்கள் என காட்டமாக பேசினார்.