செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (19:12 IST)

முக மூடிகளை கண்டேன்: புதிர் போடும் கனிமொழி

கருணாநிதியின் மகளாக கனிமொழி தந்தையின் மரணத்திற்கு பிறகு கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கவிதையில் பல சர்ச்சைக்குறிய விஷயங்களையும் இணைத்துள்ளார். கருணாநிதியின் மரணத்திற்கு பிறகு அவர் எத்தகைய வேதனையில் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த கவிதை உள்ளது.
 
அந்த கவிதையில் குறிப்பாக, நீங்கள் இல்லாத நாட்களில் புதிய முகமூடிகளை பார்த்துவிட்டேன் என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கியம் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
கனிமொழி யாரையோ குத்தி காண்பித்து இவ்வாறு வார்த்தைகளை பிரயோகித்துள்ளார் என்பது பலரின் கருத்தாக உள்ளது. ஆனால் அவர் யாரை சொல்கிறார் என்றுதான் தெரியவில்லை. 
 
பொருளாளர் பதவி, திமுக முதன்மை செயலாளர் பதவி, 4 துணை செயலாளர் பதவிகளில் ஒரு பதவி என ஏதோ ஒன்று கட்சியில் கிடைக்கும் என நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 
 
எனவே, இது போன்ற காரணங்களால் இவ்வாறு வருத்தத்துடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி கனிமொழி கவிதை எழுதியுள்ளதாக தெரிகிறது.