செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (16:24 IST)

அதிமுகவில் சேர்வதற்கு மொட்டை கிணற்றில் விழுந்து சாகலாம்; தங்க தமிழ்செல்வன்

தினகரனின் அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவதற்கு பதில் மொட்டை கிணற்றில் விழுந்து சாகலாம் என விமர்சித்துள்ளார். 
 
திருப்பரங்குன்றம், மற்றும் திருவாரூர் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை அதிமுக, திமுக, அமமுக என அனைத்து கட்சிகளும் எதிர்நோக்கி உள்ளனர்.  
 
சமீபத்தில் தங்க தமிழ்செல்வன், வரப்போகும் இரண்டு இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக கட்சியையும், சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், பொறுப்பாளர்கள் விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
 
அதேபோல், அமமுக தோற்றால் அனைவரும் அதிமுகவில் இணைகிறோம் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த விவகாரம் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய தூதுவிடுகிறார் என செய்தியாக வெளியாகியது.
 
இதற்கு பதில் அளித்துள்ள தங்க தமிழ்செல்வன், அதிமுக ஒரு மொட்டை கிணறு. மொட்டை கிண்று என்று தெரிந்தும் அதில் விழுந்தால் இற்ந்துவிடுவோம். அதே போல்தான் அதிமுகவும், அக்கட்சியில் இணைவதற்கு பதில் மொட்டை கிணற்றி விழிந்து சாகலாம் என தெரிவித்துள்ளார்.