செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (12:33 IST)

எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியாது! – கூட்டணி ப்ளானில் அண்ணாமலை?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவசர முடிவு எடுக்க முடியாது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ம் தேதி உயிரிழந்த நிலையில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணி வேட்பாளர், பிற கட்சி வேட்பாளர் விவரங்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டு வருவதாக ஆரம்பத்தில் பேசிக் கொள்ளப்பட்டது. சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர் பாஜக அலுவலகம் சென்று தேர்தல் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி இடைத்தேர்தலில் தொடருமா என்ற கேள்வி உள்ளது.

இதுகுறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது. அதிமுகவில் உள்ள பலர் முன்னாள் அமைச்சர்கள் பல தேர்தல்களை கண்டவர்கள். அதிமுக – பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றியே முதன்மையான நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

இதனால் பாஜக தனித்து போட்டியிடப்போவதில்லை என பேசிக்கொள்ளப்படுகிறது. ஆனால் பாஜக – அதிமுக இணைந்து தேர்தலை சந்தித்தாலும் பாஜக வேட்பாளரை நிறுத்தவே பாஜக விரும்புவதாகவும், இதுகுறித்து அதிமுகவிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த கூட்டணியில் எந்த கட்சி வேட்பாளர் களமிறங்குகிறார் என தெரிய வரும் என கூறப்படுகிறது.

Edit By Prasanth.K