1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified வெள்ளி, 20 ஜனவரி 2023 (13:52 IST)

தமிழ்நாடு முழுவதும் நடைபயணம்! அண்ணாமலை தயார்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறி வந்த நிலையில் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருந்து வரும் நிலையில் கட்சி பல சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு  வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அண்ணாமலை தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்காக அவர் மாநிலம் தழுவிய நடைபயணத்தை விரைவில் மேற்கொள்ள உள்ளதாக பேசிக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஏப்ரம் 14ம் தேதி அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் இருந்து நடைபயணம் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் வழியாகவும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K