வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (21:06 IST)

இதை திரும்ப திரும்ப கூறுவதில் எங்களுக்கே கூச்சமாக உள்ளது: அன்புமணி ராமதாஸ்

Anbumani
நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்பதை திரும்பத் திரும்பச் சொல்வதில் எங்களுக்கே கூச்சமாக உள்ளது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 
 
பாமக தலைவர் அன்புமணி இன்று தனது பள்ளித் தோழர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அந்த விழாவில் அவர் பேசியபோது ’அதிமுக சட்டசபையில் எண்ணிக்கை அடிப்படையில் தான் எதிர்க்கட்சிகள் உள்ளது என்றும் ஆனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை பேசி அதை நிறைவேற்ற வைப்பது தான் எதிர்க்கட்சிகள் வெற்றியாக உள்ளது என்றும் அந்த வகையில் நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்றும் தெரிவித்தார்.
 
ஆனால் இதை திரும்பத் திரும்பக் கூறுவது எங்களுக்கு கூச்சமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.