திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (20:05 IST)

நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர்- கே.என்.நேரு பேட்டி

கோவை மத்திய சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
 
ஆய்வின்போது கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு......
 
168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தரவின் பெயரில் வருகின்ற டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்து திறக்க வேண்டும் என்பதற்காக  ஆய்வுகளை மேற்கொண்டோம்.
 
நகராட்சி,மாநகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2500 பேருக்கு தேர்வு நடத்த உள்ளோம். இதில் 85 சதவீத பேருக்கு தேர்வு முறையும் 15 சதவீதம் பேருக்கு நேர்காணல் முறையில் ஆட்களை எடுக்க உள்ளோம்.
 
விரைவில் பொறியாளர்கள் உதவியாளர்கள் பத்து நாட்களில் எடுக்கப்படும்.
கோவை மாநகராட்சியில் 330 தீர்மானங்கள் நிறைவேற்றுவது செயல்படுத்துவதற்கு தான் .தீர்மானங்களை ஆராய்ந்து மக்களுக்கு தேவையானதை முன்னுரிமை கொடுத்து அனைத்தையும் நிறைவேற்றுவோம்.
 
கோவை மேயர் குறித்து முதலமைச்சர் சொல்வதைத்தான் அறிவிப்போம்,என தெரிவித்தார்.