1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (07:49 IST)

2ஆம் நிலை காவலர் பணி.. 3359 காலி பணியிடங்கள்.. விண்ணப்பம் செய்வது எப்போது?

tamilnadu
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணிகளுக்கு 3359 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 
 
இந்த அறிவிப்பில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்றும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனடியாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  
 
இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்றும், 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்றும் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva