தண்ணீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Last Modified செவ்வாய், 21 மே 2019 (21:39 IST)
தமிழகம் முழுவதும் மழை பொய்த்ததால் குடிதண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடிவரும் நிலையில் பொதுமக்களுக்கு ஓரளவு தண்ணீர் கிடைக்கின்றது என்றால் அது தண்ணீர் லாரியில் இருந்து மட்டுமே. ஆனால் வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக சென்னை மற்றும் புறநகரில் வாழும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் எடுக்க தடைவிதித்து, அதிகாரிகள் மோட்டார்களை சேதப்படுத்துவதாக லாரி ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து ஆலோசனை செய்ய தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டம் சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தண்ணீர் எடுப்பதற்காக அரசிடம் முறையான அனுமதி கேட்டும் அரசு இதுவரை முறையான அளிக்காததால் வரும் 27ம் தேதி காலவரையற்ற போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :