ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (13:58 IST)

உளவு பார்க்க பாகிஸ்தான் செய்த வேலை: சுக்குநூறாக்கிய அதிகாரிகள்

உளவுபார்க்க பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோனை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
 
கடந்த 14ந் தேதி புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையில் இந்திய  விமானப்படை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் கூடாரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
 
இந்நிலையில் குஜராத் - பாகிஸ்தான் எல்லையான கட்ச் பகுதியில், பாகிஸ்தானின் ட்ரோன் பறந்தது. இதனைக்கண்ட அதிகாரிகள், அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர். இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி தர வாய்ப்புள்ளதால், எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.