செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (17:14 IST)

சட்டமன்ற தேர்தலில் 3வது அணி... விஜய பிரபாகரன் ஆருடம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சமீபத்திய பேட்டியில் தேர்தல் குறித்து பேசியுள்ளார். 
 
தேர்தல் களத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லை. களத்தில் உள்ள முதல் - அமைச்சர் வேட்பாளர்களும் முதல் முறையாக நிற்கின்றனர். அவர்களுக்கு அனுபவம் இருந்தாலும், இந்த தேர்தல் முதல் தேர்தல் போன்றதது தான்.
 
நாங்கள் ஏற்கனவே தேர்தலை சந்தித்து உள்ளதால் தேமுதிக எதிர்நீச்சல் போட்டு செல்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் 3வது அணி அமைய வாய்ப்புள்ளது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. 
 
சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து விஜயகாந்த் முடிவு எடுப்பார். எது எப்படி இருந்தாலும் இந்த முறை பல இடங்களில் நாங்கள் வெற்றியை பெறுவோம் என விஜய பிரபாகரன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.