1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (14:31 IST)

கமல்ஹாசன் பட நடிகைக்கு ஆறுமாதம் சிறை தண்டனை.. சென்னை நீதிமன்றம் உத்தரவு!

இந்திய அளவில் 80 களில் புகழ்பெற்ற நடிகை ஜெயப்ரதா. இவர் தமிழிலும் சலங்கை ஒலி மற்றும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் தசாவதாரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அரசியலிலும் ஈடுபட்ட ஜெயப்ரதா, தற்போது பாஜகவில் இருக்கிறார். ஜெயப்ரதாவுக்கு சென்னையில் ஒரு திரையரங்கம் இருந்தது. அதன் ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஈஎஸ்ஐ தொகையை முறையாக கட்டவில்லை என அவர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இப்போது அவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் 6 மாத காலம் சிறை தண்டை விதித்துள்ளது.