திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 டிசம்பர் 2018 (12:47 IST)

ஓடிபோன நித்தி: சரண்டர் ஆகலன்னா நீ காலி; நீதிமன்றம் கிடுக்குப்பிடி

பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணையில் ஆஜராகாத நித்யானந்தா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா, பெண் பக்தர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு இதுகுறித்து ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
பாலியல் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாகவும், நேபாளம் வரை சாலை மார்க்கமாகவும் அதன்பின் பிரிட்டன் ஆதிக்கத்திலுள்ள, 'கெய்மன்' தீவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்து வந்தார் நித்யானந்தா.
 
இந்நிலையில் இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 3ல் நித்யானந்தா ஆஜராகவில்லை என்றால் அவருக்கு பிணையில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.