1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (21:23 IST)

நாளை முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லலாம்.. விலக்கிக்கொள்ளப்பட்ட வானிலை எச்சரிக்கை .

fishermen
கடலுக்குள் சென்று மீன் பிடிக்கக் கூடாது என மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனை அடுத்து நாளை முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என கடலூர் மாவட்ட மீன்வளத் துறை அறிவித்துள்ளது 
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக மணிக்கு 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடலூர் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு கரையை கடந்து விட்டதை அடுத்து வானிலை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனை அடுத்து அனைத்து வகை படகுகளும் நாளை முதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் என கடலூர் மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran