1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (18:29 IST)

தெலங்கானாவில் 5 மணி வரை டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி

தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தலையொட்டி  5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது.

தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தலையொட்டி அங்கு ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தனர்.
 
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில்   இன்று (30 ஆம் தேதி)  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.
 
இன்றைய வாக்குப் பதிவில் முதல்வர் சந்திரசேர ராவ், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பொதுமக்கல் தங்கள் ஜன நாயக கடமையை ஆற்றினர்.
 
இங்கு 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.