1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (08:10 IST)

தமிழகம் முழுவதும் இன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

voters
தமிழகம் முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் போவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் முழுவதும் ஜனவரி 5ம் தேதியான இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது திருத்துவது நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப் பட்ட நிலையில் டிசம்பர் 8 வரை திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva