1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 நவம்பர் 2025 (10:36 IST)

ஒரு வாக்காளர், தொகுதி அல்லது வீடு மாறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? முக்கிய தகவல்..!

ஒரு வாக்காளர், தொகுதி அல்லது வீடு மாறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? முக்கிய தகவல்..!
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் குறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி முக்கியமான நடைமுறை விவரங்களை தெரிவித்துள்ளார்.
 
2002ஆம் ஆண்டில் வேறு தொகுதியில் வசித்த வாக்காளர்கள், அந்த விவரத்தை வாக்குச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். அலுவலர், பழைய பட்டியலை சரிபார்த்து அவரது இருப்பை உறுதி செய்வார். அதன்பின், வாக்காளர் படிவத்தை மற்ற குடும்ப உறுப்பினர்களின் விவரங்களுடன் பூர்த்தி செய்து, அலுவலர் அடுத்த முறை வரும்போது ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
 
ஒரு வாக்குச்சாவடிக்கு சுமார் 1,200 வாக்காளர்கள் உள்ளனர். அலுவலர்கள் ஒரு நாளைக்கு 40 முதல் 50 வீடுகளுக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதால், விண்ணப்ப விநியோகப்பணிகள் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படிவங்களை பூர்த்தி செய்ய அலுவலர்கள் தேவையான உதவிகளை வழங்குவார்கள்.
 
Edited by Siva